கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்தவரை அதனுடைய அலுவலகங்கள் வெறும் கட்டி டமல்ல. தொழிலாளர் வர்க்கத்தினுடைய பாசறை யாகும். சென்னையில் உள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் இயங்கி வரும் பாலன் இல்லத்தின் படத்தை பதிவிட்டு சமூக வலைதளத்தில் அருவருப்பான வாசகங்களை ஒரு சமூக விரோதக் கும்பல் பதிவிட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடு சகிக்க முடியாதது. இந்துத்துவா மதவெறி பரிவாரத்தின் வழிகாட்டுத லில் செயல்படும் வலதுசாரி பிற்போக்கு கும்பல் சமூக வலைதளங்களில் சொல்ல முடியாத அள விற்கு அட்டூழியங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை இழிவுப்படுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் காவல்துறையிடம் ஜூலை 17ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.
அந்த அருவருக்கத்தக்க பதிவின் பின்னூட் டத்தில் சிலர் பெண்களை, குறிப்பாக மதவெறிக் கெதிராக பொது வெளியில் கருத்துரைக்கும் சமூக செயல்பாட்டாளர்களை ஆபாசமான மொழியில் அர்ச்சித்துள்ளனர். இத்தகைய போக்கு தமிழ கத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தாலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தைரியம் பெற்ற வக்கிரப்புத்திக்காரர்கள் தங்கள் சேட்டை களை அதிகரித்து வருகின்றனர்.
ஆனால் மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவையற்ற முறையில் யார் மீதாவது புகார் கொடுத்தால் உட னடியாக காவல்துறை அதை உத்தரவாக ஏற்று கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடு கிறது. பொதுவெளியில் கருத்திடுபவர்கள் நாகரி கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் யாருக் கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒரு சிலரது புகார் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது மற்றவற்றை கண்டுகொள்ளாமல் விடுவது என்ற காவல்துறையின் அணுகுமுறை அநீதியானது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் அவதூறு செய்வது, மிரட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்த சிலர் வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுக்கிற அளவிற்கு சென்றாலும் அவர்களை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை. பாசிச மனப்போக்கு கொண்டவர்கள் தங்களது அவதூறுகள் மூலம் எதையும் சாதிக்க முடியும், யாரையும் மிரட்ட முடியும் என்று செயல்படும் போது அதை தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் உண்டு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது உடனடியாக சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்த கைய போக்கு வளர அனுமதிப்பது, துணை நிற்பது தமிழகம் பாரம்பரியமாக பாதுகாத்து வந்துள்ள அறநெறிகளுக்கு மாறானது. பாசிச சக்திகளை ஒன்றுபட்டு முறியடிப்பது காலத்தின் தேவை யாகும்.