விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி என்ற படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'மார்கோனி மத்தாய்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இந்த படத்தில் நடிக்கின்றார்.
சனில் கலாதில் இயக்கி வரும் 'மார்கோனி மத்தாய்' படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். சாஜன் கலாதில் ஒளிப்பதிவில், ஷமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.