புதுதில்லி,மே 31-புதிய அரசு பதவியேற்ற நிலையில் ஜூன் 17 அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர்தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா வியாழனன்று நடைபெற்றது. புதிய அமைச்சர்கள் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டம் தில்லியில்பிரதமர் மோடி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.இந்நிலையில் ஜூன் 17 அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 17 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 26 ஆம் தேதி வரைநடைபெறுகிறது. அப்போது புதிய அரசுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.