பலகோடி செலவு செய்து தயாரிக்கப்படும் திரைப்படங்களை ரிலீஸ் ஆகும் தேதியில் இலவசமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸின் பெயரை உசித்தரித்தலே திரைத்துறையினர் நடுங்குவர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் எச்சரிக்கை மொழிகைளை தமிழ் ராக்கர்ஸ் கண்டுகொள்வதில்லை. பல்வேறு வகையில் முயற்சி செய்தும் அடுத்தடுத்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டு வெள்ளித்திரைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது. தமிழக அரசு முயற்சி செய்தும் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை பிடிக்க முடியவில்லை.
வெள்ளித்திரையில் தனது ஆட்டம் போரடிக்க அடுத்ததாக சின்னத்திரையில் காலடிவைத்துள்ள தமிழ் ராக்கர்ஸ் பிக்பாஸ் தமிழ் - 3 நிகழ்ச்சியையும் ஒவ்வொரு நாளும் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட்டு, ஸ்டார் விஜய் நிறுவனத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. நடுவடிக்கை எடுக்க முற்பட்டால் தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு தொடர்ந்து தனது பணியை செய்வதால் மூக்கணாங்கயிறு போட முடியாமல் தமிழ் திரையுலகினர் தடுமாறுகிறார்கள்.