tamilnadu

img

மூட நம்பிக்கைகளை தடுப்போம்: பினராயி விஜயன்

சூரிய கிரகணத்தை அறிவியல் பார்வையுடன் வரவேற்போம்

திருவனந்தபுரம், டிச.25- அறிவியலை அடிப்படை யாக கொண்ட புரிதலை பெற வும், பிறருடன் பகிர்ந்து கொள்ள வும் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு டிசம்பர் 26 சூரிய கிரகணம் என கேரள முதல் வர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். பள்ளிக்கூடங் கள் உட்பட பல்வேறு மையங் களில் சூரிய கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகமானோர் அந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி கிரகணத்தை பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பினராயி விஜயனின் முகநூல் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஆரோக்கி யமான சமுதாயத்தை மேம்படுத்துவதும் அதனை வளர்ச்சியை நோக்கி செலுத்து வதுமே அறிவாகும். நவீன அறிவியல் சிந்தனை போதுமான அளவுக்கு இல்லாத ஒரு காலகட்டத்தில் ஏராளமான குருட்டு நம்பிக்கைகள் கிரகணத்தைச்சுற்றி வலம் வந்தன. அண்மை காலம் வரை கிரகண நேரத்தில் அச்சத்துடன் மனிதர்கள் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்தனர். இப்போதும் அத்தகைய எண்ணங்கள் குறிப்பிட்ட வரையறையில் நமக்கு முன்பு இருக்கவே செய்கின்றன. அறிவியல் தொழில்நுட்ப அறிவு கண்மூடித் திறக்கும் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த காலத்தி லும் இதுபோன்ற மூட நம்பிக்கைகள் அகன்று விடவில்லை. நவீன கேரள சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஒரு நெருடலாக உள்ளது. இந்த நிகழ்வின் அறிவியல் அம்சங்களை நிபுணர்கள் பகிர்ந்து கொள்வார்கள். நிபுணர் களிடம் கேள்வி கேட்டும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

;