வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

போதைப்பொருள் கடத்தல்... பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி கைது...  

பெங்களூரு
தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர நடிகையான சஞ்சனா கல்ராணி கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள சஞ்சனா தமிழில் "ஒரு காதல் செய்வீர்" என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு தமிழ்ப்படம் கைவசம் வைத்துள்ளார். 

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள போதை மாத்திரைகள் (145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி) கடத்தப்படுவதாக தகவல் கிடைக்க, போலீசார் ரோந்து மற்றும் விசாரணையை முடக்கி 3 சின்னத்திரை நடிகர்களை கைது செய்தனர். அவர்களிடம் செய்யப்பட்ட விசாரணையில் நடிகை சஞ்சனா கல்ராணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவர அவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி  எனப்து குறிப்பிடத்தக்கது.  

;