tamilnadu

img

கொரோனா பாதிப்பு: தமிழக அமைச்சர்களும் மார்க்சிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினரும்

“பத்திரிகையிலும், சமூக வலைதளங்களிலும் மதுரை மக்களவை உறுப்பினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாயையும்,சகோதரியையும் அரசு மருத்துமனையில் சேர்த்தார் என்ற செய்தி கண்டு ஆச்சரியமடைந்தேன். இருவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் கூடுதல் மகிழ்ச்சி.” 

இந்தத் தருணத்தில் எனக்கு தோன்றியது இதுதான்.கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட தமிழக அமைச்சர்கள் பலர் அரசுமருத்துவமனைகளை நம்பிச்செல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நம்பிச் சென்றுள்ளனர். அவர்கள் குணமடைந்து நலமாக வீடு திரும்பியது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்குறித்து தினம்தோறும் பேசி வருகின்றனர். தொற்று கண்டறியப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளனர். தொற்றிற்கு சிகிச்சை பெற்று திரும்பியோரில் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையை நம்பிச் சென்றவர்கள்.

ஆனால்,தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தால்  தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டிகளாக அவர்கள் இருந்திருப்பார்கள். வெறும் “வாய்ஜாலத்தில்”, “வார்த்தை ஜாலத்தில்”ஒப்புக்காக இவர்கள் அரசு மருத்துவமனையை புகழ்கிறார்கள் என்றே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுஉறுப்பினரும் மதுரை மக்களவை உறுப்
பினருமான சு.வெங்கேடசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தாயார் எல்லம்மாள், தங்கை ராஜலெட்சுமி ஆகியோர் ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒன்பது நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்கள், தீக்கதிர் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

ஒரு மக்களவை உறுப்பினர் என்ற முறையில் அவர் நினைத்திருந்தால் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்றிருக்க முடியும். அதற்கு மாறாக தனியார் மருத்துவமனைகளுக்கு அரசுமருத்துவமனை ஒன்றும் சளைத்தல்ல,மருத்துவர்கள், செவிலியர்கள், தூய் மைப் பணியாளர்கள் அனைவரும் சிறப் பாக பணியாற்றுகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி., சிகிச்சையளித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.மக்கள் பிரதிநிதிகள் எப்படிப்பட்ட நிகழ்வுகளில் முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்பதற்கு கொரோனா பெருந்தொற்று ஒரு உதாரணம்.   மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன். இன்றைக்கும் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதல் கூறி, அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்து மருத்துவர் களின் ஒத்துழைப்புடன் சேவையாற்றி வருகிறார். அதே நேரத்தில் மதுரை அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசுஎன்ன செய்யவேண்டுமெனவும் போராடி வருகிறார். மது மருத்துவமனை டீன், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் வைக்கப்படும் கோரிக்கைகள் தான் என்பதில் வெங்கடேசன் தெளிவாக உள்ளார்.இவரைப் போல்,  அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கைஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிற்சில பிரச்சனைகள், குறைபாடுகள் அவ்வப்போது எழத் தான் செய்யும். அதையும் சமாளித்து “அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். கொரோனா போரில் வென்றோம்” எனக் கூறுவது தான் இரவு-பகல் பாராமல் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு நாம் செலுத் தும் நன்றியாகும்.

====மஹாலெட்சுமி===

...மதுரை...

;