tamilnadu

img

பிப்.26 - சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

பினராயி விஜயன் பேசுகிறார்

சென்னை, பிப். 17- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி 26 அன்று  சென்னையில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெற உள்ளது.  இம்மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்று கிறார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் செயற்பாட்டு குழு கூட்டம் பிப்ரவரி 16 ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிஷப் தேவசகாயம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:  குடியுரிமையைப் பறிக்கும் சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், அதைத் தொடர்ந்து வரும் என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை கைவிடக் கோரியும் “குடி யுரிமை பாதுகாப்பு மாநாடு” நடத்துவது என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் செயற்பாட்டு குழு முடிவு செய்தது.

சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ திடலில் 2020 பிப்ரவரி 26 அன்று மாலை நடக்கும் இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் மற்றும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். பாலபிரஜாபதி அடிகளார்,  மதுரை பேராயர் மற்றும் பி.ஏ. காஜா மொய்தீன் பாகவி ஆகிய மும்மதத் தலை வர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.  பத்திரிகையாளர் என். ராம் கருத்துரை வழங்குகிறார். திரைக்கலை ஞர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் அய்ஷே கோஷ்  ஆகியோர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக் கிறார்கள். இசை நிகழ்வும் உண்டு. மாநாட்டிற்கு பல்லாயிரம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் இணைந்துள்ள பல்வேறு அமைப்புகளும் இதற்கான தங்களது சிறந்த பங்களிப்பினை தந்திட உறுதி அளித்துள்ளன.  குடியுரிமை யை பாதுகாக்க நடக்கும் இந்த மாநாட்டிற்கு பெருந்திரளாக அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க வேண்டு மென்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யின் செயல்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

கையெழுத்து இயக்கத்திற்கு பாராட்டு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் இரண்டு கோடிப் பேருக்கும் மேலான மக்களிடம் கையெழுத்து பெற்று அந்தப் படிவங்கள் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையில் இத்த கைய பெருமுயற்சி எடுத்து அதை  வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளன.  இந்தக் கட்சிகளை தமிழக மக்கள் ஒற்று மை மேடையின் செயல்பாட்டு குழு உற் சாகமாக பாராட்டுகிறது, வாழ்த்துகிறது என அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளனர்.