சென்னை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 104 முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் வாட்டி வதைக்கும் என கூறியுள்ளது.