tamilnadu

தஞ்சாவூர், சீர்காழி முக்கிய செய்திகள்

தஞ்சை வாக்குப் பதிவு நிலவரம் 
தஞ்சாவூர், டிச.30- தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடை பெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.27 நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவானது டிச.30 அன்று தஞ்சா வூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திரு வோணம் ஆகிய 7 ஒன்றியங்களில் நடை பெற்றது.  காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு. இதில் மாவட்டத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 59.86 சதவீத வாக்கு பதி வாகியது. மறுவாக்குப்பதிவு நடைபெற்ற திருவிடைமருதூர் ஒன்றியம் செம்மங்குடி யில் 71.99 சதவீதம் பதிவாகியது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்
சீர்காழி, டிச.30-  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜபரணிதரன் (42). இவர், இயற்கை சித்தா உணவு முறை குழந்தைகள் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் நீச்சல் பயிற்சியாளர் நியமிக்க வேண்டும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளார்.  இவருக்கு நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கொள்ளிடம் பிரபு, காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லெட்சுமணன், ஒன்றிய தி.க தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

;