tamilnadu

img

சுவாமிமலையில் தேரோட்டம்

கும்பகோணம், ஏப்.21-கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோவில் சித்திரை விழா ஏப்.13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.