கும்பகோணம் நவ.7- கும்பகோணம் கிஸ்வா மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்தா பிரிவு இணைந்து டெங்கு ஒழிப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்றது. முகாமை குடந்தை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன் தொடங்கி வைத்தார். கிஸ்வா நிர்வாகிகள் அப்துல் சுபுஹான், முகம்மது இஸ்மாயில், ராசுதீன், மற்றும் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.