tamilnadu

தஞ்சாவூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

ரயில் பயனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை30- பட்டுக்கோட்டை மராட்டியர் தெரு பகுதியில் காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதையில் உள்ள ரயில் உபயோகிப்பாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெய ராமன் தலைமை வகித்தார். பட்டுக் கோட்டை நகர வர்த்தக சங்கத்தின் தலைவர். எஸ்.இராமனுஜம், திருவா ரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தணிகாசலம், என் கான்ஸ் தலைவர் ஏ.ஆர்.வீராச்சாமி, அறந்தாங்கி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் வரதராசன் பேராவூரணி வட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.கே.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளர் வ.விவேகானந்தம் வரவேற்றார். திருவாரூர் மாவட்ட ரயில் உப யோகிப்பாளர் சங்க செயலாளர் பேராசி ரியர் முனைவர் ப.பாஸ்கரன், பட்டுக் கோட்டை வர்த்தக சங்க செயலாளர் என்.தன்ராஜ், அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க செயலாளர் க.கல்யாணம், என்கான்ஸ் ஜி.ஜெயசீலன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், “ரயில்வே கேட்டு களுக்கு உடனடியாக பணியாளர் களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை யினை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலு வலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோரிக்கைகளை ஒருங்கி ணைந்து நிறைவேற்றிட காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே உள்ள அனைத்து ரயில் உபயோகிப்பா ளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது. பட்டுக் கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க ஆலோசகர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பதவியேற்பு நிகழ்ச்சி
அறந்தாங்கி, ஜூலை 30-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தி போர்ட் சிட்டி ரோட்டரிகிளப்பின் 4-ம் ஆண்டு பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் தலை வர் சி.கவிகார்த்திக் வரவேற்று பேசினார். முன்னாள் செயலாளர் .தினேஷ் ஆண்டறிக்கை வாசித்து கடந்த ஆண்டின் சேவைகளை விவ ரித்தார். சூர்யாஸ் பிசியோதெரபி கிளினிக் உரிமை யாளர் டாக்டர் எஸ்.விஜய் தலைவராகவும் கேம்ப்ரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி உரிமையாளர் ஏ.அப்துல் பாரி செயலாளராகவும் ஜோதி மெஸ் உரிமையாளர் ஜி.கருப்பையா பொருளாள ராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரோட்டரி மாவட்டம் 3000ன் ஆளுநர் ஏ.ஜமீர் பாட்ஷா விழாவிற்கு தலைமையேற்று அனை வருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் லெட்சுமி நாரா யணன் ரோட்டரி கிளப்பின் சேவைகளை பாராட்டி னார். பட்டயத் தலைவர் டாக்டர் எஸ்.தெட்சிணா மூர்த்தி மண்டல செயலாளர் வில்சன் ஆனந்த் துணை ஆளுநர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்தி பேசினர். சாமி வி லேண்ட்மார்க் உரிமையாளர் சாமி வெங்கட், ஓஎஸ்எம் கார்டுவேர்ஸ் உரிமையாளர் முகமது இப்ராம்ஷா, மினர்வா மெடிக்கல்ஸ் உரிமையாளர் சதீஸ்குமார், நிலா எக்ஸ்களுரிவ் உரிமையாளர் அனிகா, டாக்டர்ஸ் நர்சிங் கல்லூரி துணை முதல்வர் அனுராதா, எல்ஐசி முகவர் விஜயகுமார், இசிஆர் டிவி உரிமையாளர் பாண்டி யன், தலைமையாசிரியர் குமாரசாமி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். விழாவில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக இயங்கும் நிறுவனங்களுக்கு விருது கள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு தையல் மிசின்கள் மற்றும் அயர்ன் பாக்ஸ் இல வசமாக வழங்கப்பட்டன. முன்னாள் தலைவர் எம். கான் அப்துல் கபார்கான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயலாளர் அப்துல் பாரி நன்றி கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

தஞ்சாவூர், ஜூலை 30- தஞ்சாவூர் மாவட்டம் அதி ராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா சிறப்பு பேச்சுப் போட்டி, ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் சேக்கனா எம்.நிஜாமுதீன், பொரு ளாளர் எஸ்.எம்.முகமது முகைதீன், முன்னாள் தலைவர் என்.ஆறு முகச்சாமி, இணைச் செயலாளர் எம்.முகமது அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி. கணபதி பேசினார்.  தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தன. போட்டியை சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்தார். அதிராம்பட்டி னம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரி லியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 23 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டி நடுவர்களாக, பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர், ஆசிரியை கள் எம்.தயாநிதி, ஆர்.உஷா ஆகி யோர் செயல்பட்டனர்.  போட்டியில் மாணவர்கள் கே.விஷாலினி, பி.வீரமணி, எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோரும், மேலோர் பிரிவில், அ.அருள் தேவி, சு.பஹ்மியா, அ.முகேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். பரி சினை எஸ்.ஏ.இம்தியாஸ் அகமது வழங்கினார். லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.

;