tamilnadu

img

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை கட்டடத் தொழிலாளர்கள் லட்சம் பேர் வேலை இழப்பு

தஞ்சாவூர் டிச.24- தஞ்சை மாவட்டத்தில், பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஒரு லட்சம் கட்டடத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சை மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் மழை தொடங்கியுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்க ளில் கனமழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மாவட்டத்தில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரண மாக கட்டுமானப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  ஒரத்தநாடு, பூதலூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனி யார் வீடுகள், அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கொத்தனார், சித்தாள், உதவியாளர், டைல்ஸ் ஓட்டுபவர், கம்பி பிட்டர் என கட்டுமானம் தொடர் பான பணிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலா ளர்கள் வேலை செய்து வரு கின்றனர்.  தற்போது பெய்து வரும் மழை காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள், கட்டிடப் பொறியாளர்கள், கட்டிட உரிமையா ளர்கள் வேலையை நிறுத்தி விட்ட தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  இதுகுறித்து பேராவூரணி கடை வீதிக்கு வேலை தேடி வந்த கொத்த னார் நீலகண்டன் கூறியதாவது, “கட்டிட எஞ்சினியர்கள், காண்ட்ராக்ட் காரர்கள் காலையில் வந்து வேலை க்கு அழைத்து செல்லுவது வழக்கம். ரயிலடி, பேருந்து நிலையம், பள்ளி வாசல் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் வந்து காத்திருப்போம். தேவையான கொத்தனார், சித்தாள், உதவியா ளர்களை வேலைக்கு அழைத்து செல்லுவார்கள்.  தொடர்ந்து சிலரிடம் வேலைக்கு செல்வதும் உண்டு. மழை காரண மாக வேலைகளை நிறுத்தி விட்டனர். வேலை முடிந்து கூலி வாங்கிய பின் அரிசி, பருப்பு வாங்கிச் சென்று உலை வைக்கும் தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். மழை காரணமாக வேலை கிடைக்கவில்லை. மழை நின்றவுடன் தான் வேலைக்கு அழைப் பார்கள். கடந்த மாதம் தொடர் மழையால் 20 நாளைக்கு மேல் வேலையின்றி இருந்தோம். இனி மழை விட்டால் தான் வேலை” என்றார் வேதனையுடன்.  கட்டிடப் பொறியாளர்கள் குட்டியப்பன், திருப்பதி ஆகியோர் கூறுகையில்,” மழையால் சிமெண்ட் பூச்சு, கட்டும் பணி பாதிக்கப்படும். சிமெண்ட் கலவை மழையில் கரைவதால் பொருள் இழப்பு, தொழிலாளர் கூலி வழங்குவதில் இழப்பு போன்றவற்றை நாங்கள் சந்திக்க நேரிடும். வீட்டின் உரிமை யாளர்களுக்கும் இழப்பு ஏற்படும். இதனால் வேலையை நிறுத்தி விட்டோம். திட்டமிட்ட காலத்தில் பணி முடியாததால் இழப்பு ஏற்படும். பெயிண்டிங் பணி, எலெக்ட்ரிக்கல் வேலை, சாரம் கட்டும் பணி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்களும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது” என்றனர்.
சிஐடியு கோரிக்கை 
இதுகுறித்து இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் இ.டிஎஸ்.மூர்த்தி கூறுகையில்,” பாண்டிச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல, தமிழக அரசும் கட்டிடத் தொழிலா ளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத கட்டிடத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதால், கொள்ளிடம், பட்டுக்கோட்டை பகுதியில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும்.  கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஊருக்கே வீடு கட்டித் தரும் தொழிலாளர்கள் சொந்த வீடின்றி தவிக்கும் நிலை உள்ளது. எனவே, அரசு தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதும் அறியாத நிலையில் உள்ள கட்டுமானத் தொழி லாளர்களை நலவாரியத்தில் இணைத்து அவர்களுக்கான பலன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்” என்றார்..

;