தஞ்சாவூர், ஏப்.13- தேர்தலில் நூறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்திபல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக பயணச் சீட்டில் ஓட்டளிக்க தவறாதீர்கள், நூறு சதவீத ஓட்டு இந்தியாவின் பெருமை உள் ளிட்ட வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.