தஞ்சாவூர் நவ.4- இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆசிய பிராந்தி யத்தில் உள்ள 44 நாடுகளிலிருந்து வேளாண் விளைபொருட்களை வரியின்றி இந்தியாவிற்கு இறக்கு மதி செய்யும் நாசகர ஒப்பந்தத்தில் மத்திய மோடி அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட் டம் திங்கள்கிழமை அன்று நடை பெற்றது. இதனொரு பகுதியாக தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என். வி.கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.ரவீந்தி ரன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், மாவட்டப் பொருளாளர் எம். பழனி அய்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஞான மாணிக்கம், கே.முனியாண்டி, பி.எம். காதர் உசேன், என்.கணேசன், எஸ். கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், எம்.மாலதி, மாநக ரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நம்பிராஜன், வீ.கருப்பையா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். இந்திய விவசாயிகளை கடு மையாக பாதிக்கும், உள்நாட்டில் விளையும் விவசாய விளைபொ ருட்களை அழிக்கும் ஒப்பந்தத்தில் கூட்டு சேராதே. பால் உற்பத்தி பொ ருட்கள் இறக்குமதியால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகர ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெ ழுத்திட கூடாது என வலியுறுத்தி” கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன.