தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நாகம்மாள் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை, தஞ்சை நாட்டியக் கலாலயம் சார்பில், 3 ஆம் ஆண்டு நாட்டிய விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் அருண் சின்னப்பா தலைமை வகித்தார். மூவேந்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமியப்பன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நட்டுவாங்க கலைஞர் ஸ்வர்ணசேகர், பாட்டு மீரா சம்பத்குமார், வயலின் வி.சி.ராஜூ, மிருதங்கம் பிச்சுமணி, ஒப்பனை பத்ம.சரவணன், நாட்டிய மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிறுவனரும், ஆசிரியருமான எம்.ஸ்வர்ணசேகர் நன்றி கூறினார்.