கும்பகோணம், ஏப்.15-மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் ராமலிங்கத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாககலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் பரப்புரை செய்தனர். சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி, கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநிலபொறுப்பாளர் நாகேந்திரன் ஒன்றிய குழு சொக்கலிங் கம், சேகர் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து பரப்புரை செய்தனர்.பரப்புரையின் போது புது விடியல் கலைக்குழுவின் ராமமூர்த்தி, நீலமேகம், மல்லிகா ஆகியோர் கொள்கை விளக்க பாடல்களை பாடி வாக்கு சேகரித்தனர்.