tamilnadu

img

பார்முலா ஒன் கார் பந்தய விளையாட்டில் ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்தார் லீவிஸ் ஹாமில்டண்

பார்முலா ஒன் கார் பந்தய விளையாட்டில் மெர்ஸிடிஸ் பெண்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் தனது ஆயிரமாவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.


சீனாவில் இன்று நடைபெற்ற சீனா கிராண்ட்பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டண் வெற்றி பெற்றுள்ளார். மெர்ஸிடிஸ் பெண்ஸ் அணியின் சார்பில் விளையாடிய லீவிஸ் ஹாமில்டன் தனது சக அணி போட்டியாளரான வால்டரி பொட்டாஸை 6.5 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். மேலும், மூன்றாவது இடத்தை பெராரி அணி வீரர் செபஸ்டியன் வெட்டல் பதிவு செய்தார்.


இன்றைய வெற்றியுடன் ஆறாவது முறையாக சீனா கிராண்ட்பிரிக்ஸை வென்ற லீவிஸ் ஹாமில்டன் தனது 1000வது பார்முலா ஒன் கார் பந்தய வெற்றியை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.