tamilnadu

img

ஸ்விங் வகை பந்து வீச்சு பற்றி தெரியுமா? - சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

தற்போதைய கிரிக்கெட் உல கில் வேகப்பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என இரண்டு வகை தான் உள்ளது. சுழற்பந்து வீச்சில் திசை பிரிவு மட்டும் தான் வேறு. மற்ற வகை யில் ஒரே ஒரு பிரிவு மட்டும் தான்.  ஆனால் வேகப்பந்துவீச்சில் 3 வகை உள்ளது. ஒன்று சூப்பர் வேகம் (130 கி.மீ. மேல்), மித வேகம் (130 கிமீக்குள்), மற்றொன்று ஸ்விங் (வேகக்கணக்கீடு கிடையாது (110-135 கிமீக்குள்) என மூன்று வகைகளில் வீசப்படுகிறது. இதில் சூப்பர் வேகம் தான் முன்னிலையில் உள்ளது என்றா லும் 21-ஆம் நூற்றாண்டிலிருந்து நிலைமை மாறி ஸ்விங் பந்துவீச்சு புதிய கிங் மேக்கராக நுழைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஸ்விங் வகை பந்துவீச்சைப் பற்றி விரிவாக பார்ப்போம்:

பிறப்பு... வளர்ப்பு...

19-ஆம் நூற்றாண்டில் பிறந்த ஸ்விங் 20-ஆம் நூற்றாண்டில் தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. உணவிட்டு வளர்த்தவர் கிரிக்கெட் விளையாட்டிற்குச் சம்பந்தமில்லாத அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் பார்டன் என்பவர். முதல் தர கிரிக்கெட் போட்டியிலிருந்து ஸ்விங் வகையை பிரபலப்படுத்தினர். நாள டைவில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் ஸ்விங்கை உர மிட்டு வளர்த்தனர். இந்தியாவிற்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. 

சிறப்பு 

ஸ்விங் வகை பந்துவீச்சு 120-140 கி.மீ. இடைப்பட்ட வேகத்தில் வீசக்கூடியதாகும். பந்துவீச்சாளர்கள் பிட்சில் ஒருவித அழுத்தத்துடன் பந்தை ரிலீஸ் செய்வதால் மின்னல் வேகத்தில் ஸ்டெம்ப் பகுதிக்குள் புகுந்துவிடும். எளிதில் கணிக்க முடி யாது. சொல்லப்போனால் வேகக் கணக்கீடு இல்லாமல் தாறுமாறாக திசை திரும்பும் என்பதால் பேட்ஸ் மேன்களுக்கு தொல்லை தரக்கூடிய பந்துவீச்சாக உள்ளது. எந்தப்பக்கம் எழும்பும், எந்தப்பக்கம் கிடைமட்ட மாக ரிலீஸ் ஆகும் என்பதை திட மாகக் கணிக்க முடியாது என்பதால் கழுகுப் பார்வை மூலம் கவனித்தால் மட்டுமே ரன் குவிக்க முடியும். பெரும்பாலும் ஸ்விங் காயம் ஏற்படுத்தாது. ஆனால் அசால்ட்டாக எதிர்கொண்டால் தழும்பில்லா காயத்தை உருவாக்கும்.

மைதானங்கள் 

ஸ்விங் பந்துவீச்சு மெதுவான ஆடுகளங்களில் மட்டுமே சிறப்பாக எகிறும். இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மண்ணில் ஸ்விங் நன்றாக எழும்பும். இங்கி லாந்து நாட்டில் அதிவேக ஆடுகளம் இருந்தும் ஸ்விங் ஓரளவு கைகொடுக் கும். இந்தியாவில் ஸ்விங் நன்றாக எகிறினாலும் இந்திய வீரர்கள் மட் டுமே ஆதிக்கம் செலுத்துவார்கள். இதற்கு காரணம் பிட்ச் அமைப்பு தான். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியா, நியூஸிலாந்து ஆகிய மண் ணிற்கு ஸ்விங் என்றால் என்னவென்று தெரியாது. 

ஆதிக்கம் 

ஸ்விங் வகை பந்துவீச்சில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பி ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடு கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இலங்கை நாட்டைச் சேர்ந்த நுவான் குலசேகரா (2005-2017) ஸ்விங் பிரி வில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த வர். இவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார். இந்தியாவில் புவனேஸ்வர் குமாரும், ஆஸ்திரேலியாவில் ஹாசிலவுட், ஸ்டார்க்கும் , இங்கி லாந்து நாட்டில் ஆண்டர்சன், பிராட் ஆகியோரும், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஸ்டெய்ன், பிலாந்தர் உள்ள னர். மேற்குறிப்பிட்ட நபர்கள் அனை வரும் தற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பந்துவீச்சா ளர்களாக உள்ளனர். 

அனைவராலும் வீச முடியுமா?

ஸ்விங் வகை பந்துவீச்சை சாதா ரணமாக வீச முடியாது. கடுமையான பயிற்சி, புத்திகூர்மை, துடிப்பான திறன் போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியாளர் இன்றி ஸ்விங் பந்து வீச்சை வீச முடியாது என்றாலும் குறைந்தபட்சம் 50% பயிற்சியை தங்க ளாகவே பழகிவிடலாம். என்றாலும் கடினமான பிட்சுகளுக்குப் பயிற்சி யாளர் துணையின்றி ஸ்விங் பந்து வீச்சை செயல்படுத்த முடியாது. 

வளர்ச்சி குறைவு 

கிரிக்கெட் உலகில் முக்கிய இடத்தில் உள்ள ஸ்விங் வகை பந்து வீச்சை இளசுகள் அதிகம் விரும்ப மாட்டார்கள். இதற்கு முக்கிய கார ணம் கடின பயிற்சி தான். குறிப்பாக ஸ்விங் வகை பந்துவீச்சை சரியான மனதுடன் ஆழ்ந்த சிந்தனையில் வீசக்கூடியது. கொஞ்சம் சொதப்பி னால் பந்தின் வேகம் குறைய ஆரம் பித்துவிடும். அப்புறம் பேட்ஸ்மேன் கள் சிக்ஸர் விளாசி வானவேடிக்கை யை நிகழ்த்தி விடுவார்கள். எதிரணி வீரர்கள் ரன் குவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இளசுகள் இந்த வகை பந்துவீச்சை விரும்புவ தில்லை. 

ஸ்விங் வாய்ஸ்..

இளசுகளே... எனக்கு வேகம் கிடையாது.. ஆனால் என்னைக் கண்டு பயப்படுவார்கள்....இடை வெளி இல்லையென்றாலும் உள்ளே நுழைவேன்... காயம் ஏற்படுத்தும் பழக்கம் கிடையாது... வானில் பறக் கும் (பவுன்சர்) எனக்குச் சக்தி இல்லை... ஆனால் என்னை வளர்த்தால் கிரிக்கெட்டில் தனி இடம் கிடைக்கும்...


 

;