tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்றுக்குள் நுழையும் வீரர்கள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து வரும் நிலையில் நான்காவது சுற்றுக்குள் நுழைந்து பிரபல வீரர்கள் பலர் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ருமேனியா நாட்டு வீராங்கனை சிமோனா ஹலீப் உலக தரவரிசையில் 27வது இடத்திலுள்ள லெய்சா சுரெங்கோவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெறும் 55 நிமிடங்களில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். உலகின் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் ரோஜர் பெடரர் நார்வே நாட்டு வீரர் காஸ்பர் ருத்தை 6-3, 6-1 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வென்று தொடரின் நான்காவது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

மூன்றாவது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் களிமண் களத்திற்கு பெயர்போன ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடால் பெல்ஜியம் நாட்டு வீரர் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 6-1, 6-3, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.