ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப்
டென்னிஸ் உலகின் தரவரிசையில் டாப் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி இறுதிச்சுற்றுத் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் (முதல் சுற்று) டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்), 7-ஆம் நிலை வீரரான ஜுவரேவை (ஜெர்மனி)எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜுவரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நடாலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பட்டம் வெல்வார் என கணிக்கப்பட்ட நடால் தொடக்கத்திலேயே திணறுவது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது. ஏடிபி இறுதிச் சுற்றுத் தொடரின் குரூப் சுற்றில் நாக்-அவுட் கிடையாது என்பதால் நடால் தனது இரண் டாவது ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொள் கிறார். இந்த ஆட்டத்தில் நடால் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.