tamilnadu

img

நாம் ஒன்றல்லவா… நாமெல்லாம் ஒன்றல்லவா...!

தீச் சுடருடன் எச்சரிக்கை விடுத்து ஒரு போராட்டம்

திருவனந்தபுரம், ஜன. 7- ‘நாம் ஒன்றல்லவா.. நாமெல்லாம் ஒன்றல்லவா… இந்த மண்ணுக்கு சொந்தமும் நாமல்லவா’ என்று இருட்டைக் கிழித்த தீச்சுடர் ஏந்தியும், பாடியும் நூற்றுக்கணக் கானோர் ஒருமைப்பாட்டை பிரகடனம் செய்தனர். முதியோர், பெண்கள், குழந்தைகள், இளம்பெண்கள், இளைஞர்கள் என ஒன்றுகூடியது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக…! நாட்டை பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களின் பாசிஸ்ட் பேராசைக்கு எதிராக…! திருவனந்தபுரம் நகரின் சாலை சிபிஎம் பகுதிக்குழு ஏற்பாடு செய்திருந்த ‘போராட்டத் தீ’ நிகழ்ச்சியில் அரசியல் வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதியினரும் ஒன்று திரண்டனர். இரவு 12 மணி வரை போராட்டத் தீயும் குரலும் எழுந்தன. கமலேஸ்வரத்தில் துவங்கிய தீச்சுடர் பயணம் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு மட்டுமல்ல, வீடுகளிலிருந்து வெளியே வந்து ஆதரவு தெரிவித்த மக்களுக்கும் புதியதொரு அனுபவம்தான். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன், பிரபல இயக்குநர் ஷாஜி என்.கருண், பாளையம் இமாம் சுபைல் மவுலவி, நடிகை மாலா பார்வதி, ஜேஎன்யுவில் காவிக்கும்பலின் தாக்குதலை சந்தித்த சூரி கிருஷ்ணன், முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் பீமாபள்ளி ரஷீத் உள்ளிட்டோர் பேசினர். கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கேரளா முழுவதும் பல்வேறு வடிவங்களில் மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வருகிறார்கள்.
 

;