tamilnadu

img

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்:

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் ப்பட்டனர். காஷ்மீர் மாநிலம், ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப்படையினர் வெள்ளியன்று அதிகாலை தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.  


இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

;