பாலியல் புகாரில் பெரியார் பல்கலை கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் அளித்திருந்தார். ஆராய்ச்சி வகுப்பிற்காக விடுமுறை தினமான ஞாயிறன்று மாணவியை பல்கலை கழகத்திற்கு வர அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொறுப்பு பதிவாளர் கோபி தன்னை மாணவி அடியாட்களை வைத்து அடித்ததாக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி தரப்பிலும், அடியாட்களை வைத்து அடித்ததாக பல்கலை பொறுப்பு பதிவாளர் தரப்பிலும் தனித்தனியாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தநிலையில் கோபி அளித்த புகார் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.