திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

மேட்டூர், ஏப்.20-காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 42 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக் காக விநாடிக்கு 1,000 கன அடியும், பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 20.76 டிஎம்சி உள்ளது. கடந்த 10 நாட்களில் சராசரியாக 2 டிஎம்சி குறைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

;