சேலம், ஜன. 23- எடப்பாடி அருகே விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மின்னழுத்த கோபுரம் மீது ஏறி விவ சாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள முத்தையம்பட்டி செவடன் காட்டில் ஆனந்தன் (60) என்பவரின் நிலத்தில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைப்பதற் கான பணிகளை பவர்கிரிட் நிறுவன ஊழி யர்கள் மேற்கொண்டனர். ஆனால், இப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் மின் கோபுரத்தின் மீது விவசாயி ஆனந்தன் ஏறி நின்று கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது, தன் நிலத்திற்க்கு உரிய இழப் பீடு தரவேண்டும். இல்லை என்றால் என் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது சம்பந்தமாக விவசாயி ஆனந்தன் கூறுகையில், உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க அரசு அனைத்து ஏற்பாடுகளை யும் செய்து வந்த நிலையில், எனது விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதனடிப்படையில் பணிகளை பவர்கிரிட் நிர்வாகத்தினர் செய்து வந்தனர் இருப்பி னும் இதுவரை எவ்வித இழப்பீட்டு தொகை யும் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரு கின்றனர். மேலும், இழப்பீட்டு தொகை கேட்டு அதிகாரிகளிடம் சென்றபோது, மிகவும் தரக்குறைவாக நடத்தியதால் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட் டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். முன்னதாக, கடந்த மாதம் பெருமாள் என்ற விவசாயி உரிய இழப்பீடு வழங்கா மல் தனது விளைநிலத்தில் இருந்த மரங் களை பவர்கிரிட் அதிகாரிகள் வெட்டியதற் காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது விளை நிலத் திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி ஆனந்தன் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக டவர் மீது ஏறி போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயி ஆனந்தனி டம், பவர்கிரிட் அதிகாரிகள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயி ஆனந் தன் கீழே இறங்கி வந்தார். இப்போராட் டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.