tamilnadu

ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

சேலம், ஜன. 19- சேலம் அருகே உள்ள கொங்கணாபுரத்தில் ரூ.80 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்திலுள்ள திருச்செங் கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனி யன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 4000 மூட்டை பருத்தி வந்தது. இதில், டிஜிஎச் ரகம் குவிண்டால் ரூ.6,112 முதல் ரூ.6,649 வரையும், பிடி ரகம் குவிண்டால் ரூ.4,952 முதல் ரூ.5,369 வரையும், பிடி 2 வது ரகம் குவிண் டால் ரூ.4,399 முதல் ரூ.4,800 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.