சேலம், நவ.7- அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் ஒப்பாரிப் போராட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து “தீபாவளி பண் டிகை பஜார்” என்ற பெயரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், களி மண்ணால் செய்யப்பட்ட பலகாரங்களை படையலிட்டு ஒப்பாரி வைத்தனர்.
மேலும், தமிழக அரசு பண்டிகை கால உணவு பொருட்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும். வெங்காய விலையை கட்டுப்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் கே. ராஜாத்தி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராதிகா, மாவட்டச் செயலாளர் ஞானசவுந் தரி, மாவட்ட துணை தலைவர் வைரமணி, வடக்கு மாநகரக்குழு செயலாளர் காவேரி, மேட்டூர் தாலுகா செயலாளர் எஸ்.எம்.தேவி, நங்கவள்ளி தாலுகா செயலாளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.