சென்னை, மே 14- தமிழ்நாட்டிலிருந்து வெளி நாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறி வுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து பொது சுகா தாரம் மற்றும் நோய்த் தடுப் புத்துறை இயக்குநர் வெளி யிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ் சள் காய்ச்சல் நோய்த் தாக்கம் காணப்படுகிறது.
எனவே, மஞ் சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண் டும் என ஒன்றிய அரசின் சுகா தார அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. ஒருவருக்கு மஞ்சள் காய்ச் சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்கு பிறகு மேற்கண்ட நாடுக ளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடு களில் இருந்து இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர்.
இது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றி தழ் மூலம் கண்காணிக்கப்படு கிறது. மேலும், இந்தியாவில் மஞ் சள் காய்ச்சல் விவரங்கள் மற் றும் தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணைய தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில், ஒன்றிய சுகாதார அமைச்சகம் அங்கீ கரித்து உள்ள 3 மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத் தும் தடுப்பூசி மையங்களில் பாஸ்போர்ட், சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத் துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்) அடங்கிய ஆவ ணங்களை காண்பித்து கிண்டி யில் உள்ள பன்னாட்டு தடுப் பூசி மையம் மற்றும் கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலை யம் ஊசி போட்டுக் கொள்ள லாம்.
சென்னை ராஜாஜி சாலை யில் உள்ள துறைமுக சுகா தார நிறுவனம், துறைமுக சுகா தார அதிகாரி, துறைமுக சுகா தார அமைப்பு எண்: பி-20, உலக வர்த்தக அவென்யூ, புதிய துறைமுகம் தூத்துக் குடி- இந்த மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட் டில் வேறு எந்த அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப் படவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.