tamilnadu

img

விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை

இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பணி: Management Trainee
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: வேளாண் அறிவியல், தகவல் தொடர்பியல், சட்டம், கணக்கியல் துறையில் முதல் வகுப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hindi Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.32,795 - ரூ.62,315
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலையில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.11.2021 தேதியின்படி, 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும்  இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம் : சென்னை, கோவை, திருச்சி

விண்ணப்பிக்கும் முறை : www.aicofindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.aicofindia.com/AICEng/General Documents/Advertisements/Advertisement_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

;