சென்னையில் மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூளைமேடு புதிய மேற்குத் தெரு பகுதியில் மின்மாற்றியில் இருந்து தீப்பொறி வெளியானது. அப்போது அந்த வழியாக மளிகைப்பொருள்கள் வாங்கச் சென்ற பெண் துப்புரவுத் தொழிலாளி லீமா ரோஸ்மீது தீப்பொறி பட்டது. இதையடுத்து 29 சதவிகித தீக்காயம் பாதிக்கப்பட்ட லீமா ரோசை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லீமா ரோஸ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே மின்மாற்றியில் தீப்பொறி வெளியானபோது மின்வாரிய ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததே பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.