திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

வி.பி.சி நினைவுச் சுடருக்கு திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை, ஜன.20- சிஐடியு அகில இந்திய மாநாட்டையொட்டி, தொழிற் சங்க முதுபெரும் தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடர் பயணம்  வடசென்னை, திருவள்ளூர், வேலூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்தது. வடசென்னை மாவட்டச் செயலாளர் திருவேட்டை தலைமையில் துவங்கிய நினைவுச்சடர் பயணம் செவ்வாய்யன்று கண்ணமங்கலத்திற்கு வந்தடைந்தது.  அங்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி தலைமையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில், பொருளாளர் தண்டபாணி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மண்டலத் தலைவர் நாகராஜன், பொதுச் செயலாளர் சேகர், மண்டல பொருளாளர் எஸ். முரளி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு நிர்வாகி சிவப்பிரகாசம், முன்னாள் மாவட்டத் தலைவர் சி.அப்பாசாமி, மாவட்ட நிர்வாகி பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி, சேவூரில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.காங்கேயன் தலைமை தாங்கினார். சிஐடியு  நிர்வாகிகள் வெ.மன்னார், சேகரன், ரவி, விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.        செய்யாரில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்திற்கு சிஐடியு தலைவர் கே.செல்வம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வே.சங்கர் முன்னிலை வகித்தார். மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, சேகர், சோலை பழனி, வி.எம்.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பயணக் குழுவில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன், மாநிலக் குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

;