tamilnadu

img

இடதுசாரிகளுடனான உறவை நீர்த்துப்போக விட மாட்டோம்: தொல்.திருமாவளவன்

சென்னை, மே 29 - இடதுசாரிகளுடனான உறவை எந்த நிலையிலும் நீர்த்துப்போக விட மாட்டோம் என்று விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவ ளவன் கூறினார். விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விருதுகளை வழங்கி தொல்.திருமாவளவன் பேசியதன் சாராம்சம் வருமாறு: பெண்கள், தலித்துகள், சிறுபான் மையினர் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் அரசியல் படுத்த வேண்டும்.

சமூகத்தில் புரட்சி, சாதி  ஒழிப்பு, புரட்சிகர மாற்றம் நடக்கா ததற்கு காரணம் ஓபிசி மக்களை அரசியல் படுத்துவதுதான். வேங்கை வயல் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. மாவட்ட ஆட்சி யர் தலைமையேற்று தலித் மக்களை ஆலயத்திற்கு அழைத்து செல்கிறது, சாதி சொல்லி திட்டுகிற அவலம் உள்ளது. சனாதனத்தின் மீது நம்பிக்கை  வைத்திருப்பவர்கள் உழைப்பாளி களாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள். ஓபிசிக்கான இட ஒதுக்கீடு கூடாது என்ற பாஜகவை தூக்கி பிடிக்கும் பாமகவினரை அரசியல் படுத்த வேண்டாமா? தலித்துகள் அமைப்பா கவும், அரசியலாகவும் ஒன்றுபடுத்த வேண்டி உள்ளது.

அதைவிட அம்பேத் கரியம், மார்க்சியம் ஊர் தெருவுக்கு சென்று சேர வேண்டி உள்ளது. நாமெல்லாம் பிறப்பதற்கு முன்பே சாதி ஒழிப்பை பேசியவர்கள், போரா டியவர்கள், இரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். பார்ப்பனிய தனி மைப்படுதல் நீர்த்துப்போய் இந்து என்ற உத்தியை கையாள்கின்றனர். இதற் கெதிரான போராட்டக்களமாக இந்த விருது வழங்கும் விழா நடத்துகிறோம். நட்பு சக்திகளை வலுப்படுத்துவது முக்கியம். நமக்கு ஆதரவாக இடது சாரிகளும், பெரியாரிய சக்திகளும் உள்ளன.

இந்தியா முழுவதும் ஜன நாயகத்தை காக்க இடதுசாரிகள் போராடி வருகின்றனர். அவர்களு டனான உறவை எந்த நிலையிலும் நீர்த்துப்போக விட மாட்டோம். மோடியை போன்ற ஆயிரக்கணக் கான மோடிகளை சனாதன சக்திகளால் உருவாக்க முடியும். மோடி இடத்தில் யோகி ஆதித்தியநாத் போன்றோரை கொண்டு வர அவர்களால் முடியும். அவர்களுடைய அடிப்படையான நோக்கமே அரசமைப்பு சட்டத்தை அழி ப்பதுதான். ஜூன் 4ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாலும் அது நிரந்தரமானதல்ல. சனாதனத்தை வீழ்த்தும் போராட்டம் தொடரும். தனிமனிதராக பேசினால் பயனில்லை. திரைத்துறையில் முற்போக்கு சக்திகள் வளர வேண்டும். முற்போக்கு சிந்தனை யாளர்கள் உச்சம் தொட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;