ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ரேவதிபுரம் செல்லும் பிரதான சாலையில் மழை நீர் கால்வாய்கள் இல்லாததால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊரப்பாக்கம் கிளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.