ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித உணவு தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்தியாவில் 2021 கணக்கின்படி, 74.1 சதவீதம் மக்கள் - அதாவது 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னும் கூட சத்தான, சுகாதாரமான உணவை பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளது. அதேபோல 2020 - 22 காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 16.6 சதவீதம் மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
100 கோடி மக்கள் பசியின்பிடியிலும் நல்ல உணவு கிடைக்காமலும் இருக்கும் நிலையில், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மோடி அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த உண்மையை மறுப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை நிராகரிக்கிறது மோடி அரசு. உரிய நடவடிக்கைக்குப் பதிலாக மறுத்து ஒதுக்குவதால் பாதிக்கப்படுவது மக்களே.