tamilnadu

img

ஒன்றியத் தேர்தல் தள்ளி வைப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை,ஜன.31- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்தல் ஜன.30 அன்று நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டராம்பட்டு, துரிஞ்சா புரம் ஒன்றியங்களில், நிர்வாக பிரச்சனை காரணமாக, தேதி குறிப்பிடாமல், மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக, அறி விக்கப்பட்டது. இதையடுத்து, தண்டராம்பட்டு ஒன்றிய பகுதி திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் செங்  கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோ சனையின் பேரில் கலைந்து சென்றனர்.

;