“இசை பெரிதா, மொழி பெரிதா என்பதை யாரும் இங்கு சொல்ல முடியாது. மக்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதுதான் பெரியது. தமிழும் இசையும் இரண்டறக் கலந்தது தான் இசைத்தமிழ். நம் மக்கள் இரண்டையும் போற்றுவார்கள். இசைத்துறையில் எனது அப்பா சாதித்த விஷயங்கள் நிறைய! இசை யுனிவர்ஸ் என்றால் அவர் அதில் மவுண்ட் எவரெஸ்ட்” என்று இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.