tamilnadu

img

மலைகளின் அழகை கண்டு ரசிக்கும் வாய்ப்பு; கொல்லம் - செங்கோட்டை தடத்தில் சென்னைக்கு ரயில்

கொல்லம், மே 12-  திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து கொல்லம் - புனலூர் -  செங்கோட்டை வழியாக சென்னைக்கு குளிர்சாதன சிறப்பு ரயில் சேவை தொட ங்க உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் பகுதியில் இருந்து இந்த வழித்தடத்தை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. அகல ரயில் பாதைக்கு மாறிய பிறகு முதல் முறையாக மேற்குத் தொடர்ச்சி மலை யின் அழகை ரசிக்கும் வகையில் தெற்கு ரயில்வே இந்த சேவையைத் தொடங்க உள்ளது. மீட்டர் கேஜாக இருந்தபோது, செங்கோட்டை வழியாக திருவனந்த புரம்- சென்னை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது தாம்பரம் - கொச்சு வேலி குளிர்சாதன சிறப்பு ரயில் (06035) வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் அதிகாலை 1.40 மணிக்கு கொச்சு வேலி சென்றடையும். திரும்பும் ரயில் (06036) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து அதிகாலை 3.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சிராப் பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருது நகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சாண்டி, கடைய நல்லூர், தென்காசி, தென்மலை, புன லூர், ஆவணீஷ்வரம், கொட்டாரக் கரை ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் உள்ளன.

விழுப்புரத்தில் நிறுத்தம் உள்ள தால், பாண்டிச்சேரி செல்பவர் களுக்கும் இந்த சேவை உதவியாக இருக்கும். இந்த ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன குறைந்த கட்டண பெட்டிகள் 14 இருக்கும். முன்பதிவு தொடங்கிவிட்டது. கொச்சுவேலி – சென்னை கட்டணம் ரூ.1335. தாம்பர த்தில் இருந்து வரும் 16ஆம் தேதி முத லும் கொச்சுவேலியில் இருந்து 17ஆம் தேதி முதலும் சேவை தொடங்குகிறது. இரு திசைகளிலும் 14 பயணங்கள் இருக்கும். இந்த சிறப்பு சேவை ஜூன் வரை நீடிக்கும், ஆனால் பயணி களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.