சென்னை, ஆக. 21 - சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்று லாவை மேம்படுத்தும் நோக்கிலும் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வரு கின்றன. சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 17 வகை யான விருதுகள் இதில் அடங்கும்.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக் கான சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிப்ப தற்கான காலக்கெடு ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருதுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி வழங்கப்படும் என்று மாநில சுற்றுலாத் துறை ஆணை யர் சி. சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.