tamilnadu

img

கழிவுநீர் அடைப்புகளை அகற்ற நவீன ரோபோட்டிக் இயந்திரங்கள் உயிரிழப்புகளை தடுக்க உதவும்

சென்னை, மே 17- சென்னை மாநகரில் பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை அகற்றுவதற்கு மூன்று நவீன ரோ போட்டிக் இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.   விஷவாயு கசிவால் விலை மதிப் பற்ற மனித உயிர்கள் பறிபோவது இனி யாவது தடுக்கப்படுமா? என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் நாகரீகம் வளர்ந்துவிட்டது என பெருமை பேசி னாலும், மனிதக் கழிவுகளை மனிதனே  அள்ளும் அவலம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

முறை யான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியை மேற் கொள்ளும்போது, விஷவாயு தாக்கி விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் அகற்றும் பணியின் போது மனித உயிர்களை இழப்பதற்கு முக்கியக் காரணம், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங் கள் சரியாக வழங்கப்படுவதில்லை என்பது தான் பலரது குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக இந்திய அளவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பது, நம்மை வெட்கி தலைகுனிய வைக்கி றது.

இப்படி கழிவுநீர் அடைப்புகளை அகற்றும்போது ஏற்படும் உயிரிழப் புகளை தடுக்கும் வகையில், சென்னை யில் கழிவு நீரை அகற்ற மூன்று நவீன ரோபோட்டிக் இயந்திரங்கள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை யில் 500க்கும் மேற்பட்ட கழிவு நீர் அடைப்பு அகற்றும் இயந்திர வாகனங்கள் உள்ளன. தினமும் 75 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப் படும் நிலையில், இதற்காக 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்காக ரிமோட் கண்ட்ரோ லில் இயக்கப்படும் “பேண்டி கூட்” என்ற மூன்று நவீன ரோபோட் இயந்திரங்கள் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை நவீன இயந்திரத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட் டுள்ளன. இவை கழிவு நீர் குழாயில் கழிவுகள் எங்கு தேங்கி உள்ளது என்பதை திரையில் காட்டும். 180 டிகிரியில் திரும்பும் இந்த பேண்டிகூட் நவீன இயந்திரம் மூலம், 360 டிகிரியில் உள்ள அடைப்பு மற்றும் சகதிகளை எடுக்க முடியும். இந்த இயந்திரம் மூலம் கழிவு நீர் அடைப்புகளை மிக எளிதாக தங்களால் அகற்ற முடிவ தாக துப்புரவு பணியாளர்கள். கூறு கின்றனர்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்த ரோ போட்டிக் இயந்திரங்களில் இரைச்சல் மற்றும் புகை கட்டுப்படுத்தப்பட் டுள்ளதால், தங்களுக்கும், பொதுமக்க ளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், மிக முக்கியமாக கழிவுநீர் கால்வாயில் விஷவாயு கசிவு இருந் தால் சென்சார் உதவியுடன் முன் கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறது. இதனால் விஷவாயு கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடி யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

;