tamilnadu

img

டைடல் பார்க் ‘யு’ வடிவ மேம்பாலம்

சென்னை, மே 30- டைடல் பார்க் சந்திப்பு அருகே கட்டப்பட்டு வரும் யு - வடிவ மேம்பால கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஓரிரு மாதங்களில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே  போகிறது. நாளொன்றுக்கு 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைக்கு வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத வகையில் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்கள், பல்வேறு நிறுவனங்கள், புறநகர்ப் பகுதியின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ராஜீவ் காந்தி சாலையில் எந்நேரமும் வாகன நெரிசல் காணப்படுகிறது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடை பெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இந்த சாலையில் தினமும் சென்று வருவது பெரும் சாதனையாகவும், சோதனையாகவும் உள்ளது.

ராஜீவ் காந்தி சாலை, திருவான் மியூர் ஈசிஆர் சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல்  சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சிக்னல் சந்திப்பை கடக்க 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. பல நேரங்களில் வாகனங்கள் நத்தை போன்று ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. காலை, மாலையில் நெரிசல் மிக்க நேரங்களில் இந்த சந்திப்புகளை கடக்க 30 நிமிடங்கள் கூட பிடிக்கி றது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் நிற்கிறது. அப்போது எழும், ஒலி, புகை மாசு ஆகியவற்றால் வாகன ஓட்டிகள் உடல் உபாதை களுக்கு உள்ளாகின்றனர்.

இந்தச் சாலையில் வாகன நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த னர். அதன்படி டைடல் பார்க்  சந்திப்பு, இந்திரா நகர் சந்திப்பு களில் வாகனங்கள் திரும்பி செல்வதை தடுக்கும் வகையில் பாலங்கள் அமைக்க திட்டமிட்டனர். அதன்படி இந்திரா நகர் சந்திப்பு  அருகே ஒரு யு வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட் டுள்ளது.

அதேபோன்று டைடல் பார்க் சந்திப்பில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் 250 மீட்டர்  நீளமுள்ள யு வடிவ மேம்பாலம் கட்டி வருகிறது. 108 கோடி ரூபாய் மதிப்பீ ட்டில் 2020 ஆண்டு தொடங்கிய மேம்பால கட்டுமான பணி, தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. பாலத்திற்கு வண்ணம் பூசுதல், தார் சாலை அமைத்தல், மின் விளக்குகள் பொருத்துதல், அணுகுச் சாலைகளை அகலப்படுத்தி செப்ப னிட்டு, மேம்படுத்துதல், பாலத்தின் ஓரத்தில் தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் போது, திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அனைத் தும் யு வடிவ மேம்பாலத்தின் வழியாக சிஎஸ்ஐஆர் சாலை, மத்திய  கைலாஷ் நோக்கி ராஜீவ் காந்தி சாலைக்கு சிக்னலில் நிற்காமல் செல்ல முடியும். டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்புகளில் மணிக்கு 13 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பாலம் திறக்கப் பட்டதும், சிக்னல்கள் அகற்றப்படும். இதனால் டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்புகளில் வாக னங்கள் தடையின்றி சீராக செல்லும் நிலை உருவாகும்.

டைடல் பார்க் சந்திப்பிற்கு அருகே உள்ள திருவான்மியூர் ரயில்  நிலையத்திலிருந்து வெளியே வரும்  மக்கள் எளிதாக சாலையை கடக்க ஏதுவாக எஸ்கலேட்டர் வசதியுடன் ஒரு நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணியையும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.

;