tamilnadu

img

ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை மூடப்படும் பொறியியல் முதுகலைப் படிப்புகள்!

சென்னை, ஜூலை 10- கடந்த 2 வருடங்களில் தமிழகத்தி லுள்ள 126 பொறியியல் கல்லூரிகளில் 225 முதுகலை படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வள்ளி யம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் பி.சிதம்பர ராஜன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “ஒரு முதுகலை துறையை நடத்து வதற்கு 3 ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர் விகித தளர்வு காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் முது கலைத் துறை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. குறைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளே நிறைய முதுகலைப் படிப்புகளை மூடியதற்கு காரணம்”என்கிறார். இந்தக் காரணங்களால், ஸ்ரீ சிவ சுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி பொறி யியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முது கலை படிப்புகளுக்கான துறைகள் நீக்கப்பட்டுள்ளன. வி.ஐ. டி. எனப்படும் வேலூர் தொழில்நுட்ப நிறுவனமானது, 7  முதுகலை படிப்புகளையும், 2 இளங் கலை படிப்புகளையும், சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனமானது 7 முதுகலை படிப்பு களுக்கான துறைகளையும் மூடியுள் ளன. விருதுநகர் மாவட்டம், கலச லிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு வனம் இந்த கல்வியாண்டில் மட்டும் 9 முதுகலை படிப்புகளை நீக்கி யுள்ளது என அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித் துள்ளது. 2019 – 20 கல்வியாண்டில், 79  பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல் கலைக்கழகங்களில், 133 முதுகலை படிப்புகளையும், 66 இளங்கலை படிப்புகளையும் நீக்கியுள்ளன. நீக்கிய துறைகளில், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை, மென்பொறியியல், மின்னணுவியல் மற்றும் கணினி உதவி வடிவமைப்பு ஆகிய துறைகள் அடக்கம். சென்ற கல்வியாண்டில் (2018 -19), 47 பொறியியல் கல்லூரிகளில் 92 முது கலை படிப்புகளும், 42 இளங்கலை படிப்புகளுக்கான துறைகளும் மூடப்பட்டுள்ளன. “அண்ணா பல்கலைக்கழ கத்திலும், அதன் கீழ் இயங்கும் கல்லூரி களிலும் சில முதுகலை துறைகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. மாணவ சேர்க்கைக்கு புதிய முதுகலை துறைகளை உருவாக்க வேண்டும்” என அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா தெரி வித்துள்ளார். முதுகலைப் படிப்புகளை மூடுவ தனால், பொறியியல் ஆராய்ச்சி தரம் மற்றும் கல்வி தரம் குறையும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.