திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

10 மாவட்டங்களில் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு 

வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும், சென்னையில் அதிகபட்ச வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


;