tamilnadu

img

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மனு


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் கோரி தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. 

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுப்பது குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொது நலவழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படு வருகிறது. இந்த பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்ற நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.