tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நாடாளுமன்ற உறுப்பினர்களை - குறிப்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது என்பது படிப்படியாக வளர்ந்து, தற்போது எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினரை(திரிணாமுல் கட்சியின் மஹூவா மொய்த்ரா) அவையிலிருந்து நீக்குவதில் போய் முடிந்திருக்கிறது. 

பாஜக அல்லாத கட்சிகளின் உறுப்பினர்கள், கடுமையான குற்றங்களோ அல்லது வார்த்தை பிரயோகங்களோ செய்யாத நிலையிலும்  சமீப காலத்தில் அவையிலிருந்து  வெளியேற்றப்படு வதும் இடைநீக்கம் செய்யப்படுவதும் அதி கரித்துள்ளது என ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் மக்களவையில் மொத்தம் 144 இடைநீக்கங்கள் நடந்துள்ளன. அவற்றில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நடந்தது 94 இடைநீக்கங்கள்.  அரசாங்கத்தை கேள்வி கேட்கும் நாடாளுமன்றத்தின் உரிமையை பறிப்பது தீவிரமடைந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது.