tamilnadu

img

கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் துணை இயக்குநரிடம் எஸ்எப்ஐ முறையீடு

சென்னை, மே 20- தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி  இயக்குநரகத்தின் கீழுள்ள 164 கலை - அறிவியல் கல்லூரிகளில், 1.20 லட்சம் இளநிலை படிப்புக் கான இடங்கள் உள்ளன. இந்த  இடங்களில் முதலாம் ஆண்டு மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள் பதிவு www.tngsa.in என்ற இணையதள முகவரியில் மே 6 அன்று துவங்கிய நிலையில், மே  20-ஆம் தேதியுடன் இதற்கான அவ காசம் முடிவடைகிறது. ஆனால், இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்  டும் என்று இந்திய மாணவர் சங்  கம் (SFI) ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது. 

இந்நிலையில், சென்னை  சைதாப்பேட்டை அண்ணாசாலை யில் உள்ள கல்லூரி கல்வி இயக்கு நரகம் அலுவலகத்தில் துணை இயக்குநர் ராவணனை சந்தித்த இந்  திய மாணவர் சங்கத்தின் தலைவர்  கள் நேரிலும் மனு அளித்து முறை யிட்டுள்ளனர். சா.காவியா, சி. மிரு துளா, ரா. பாரதி ஆகியோர் மனு அளிக்  கும் இயக்கத்தில் பங்கேற்றனர்.

மூன்றரை லட்சம் வரை மாண வர்கள் விண்ணப்பிக்க வாய்ப் புள்ளதால், கால அவகாசத்தை நீட்  டிக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ள இந்திய மாணவர் சங்கம், அரசுக் கல்லூரி கலந்தாய்வு- ஒவ்  வொரு சுற்றுக்கும் 10 நாள் இடை வேளை விடுத்திருப்பதை மறுபரி சீலனை செய்ய வேண்டும்; இந்த இடைப்பட்ட காலம் தனியார் கல்  லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை யை நோக்கியே மாணவர்களைத் தள்ளும்; எனவே, குறுகிய காலத்  தில் கலந்தாய்வை முடிக்க வேண் டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

;