பெங்களூரு:
இந்தியாவில், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னணி தொழில்அதிபர்களில் ஒருவரும், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைவருமான நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.இதுதொடர்பாக பேட்டிஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநில அரசுகள்மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்து உள் ளன. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசிஒரு பொது நன்மையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் இலவசமாக தடுப் பூசி போடப்பட வேண்டும். மத்தியஅரசு இதை செய்யும் என நான் நம்புகிறேன். கொரோனா தடுப்பூசி லாப நோக்கத்திற்கானதாக இருக்கக் கூடாது.
கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து வீட்டிலிருந்து பணியாற்றும் (WorkFrom Home) நடைமுறை வந்தது. இந்த நடவடிக்கைதொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க முடியும். அதைத் தொடர முடியாது.நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் சிறிய வீடுகளிலேயே வசிக்கின்றனர். அவ்வாறிருக்கையில், தனிமையான ஒரு இடத்தைப் பெறுவதும், அந்த சிறிய வீட்டிற்குள் இருந்தபடி பணி செய்வதும் கடினம். அதுபோலவே, கல்வி நிறுவனங்களையும் இதற்கு மேல் மூடமுடியாது. இவ்வாறு நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.