tamilnadu

அடுத்தடுத்து மோதிய பேருந்துகள்: மீண்டும் கோர விபத்து; 4 பேர் பலி!

மதுராந்தகம், மே 16 - மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டதில்  4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பழமத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு சொகுசு பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனை அடுத்து பின்னால் வந்த அரசுப் பேருந்தும், இதனை அடுத்து லாரியின் பின்புறம் தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி,  பிரேக் பிடிக்காமல் வேக கட்டுப்பாட்டை  இழந்து பேருந்து மீது மோதி அடுத்தடுத்து மூன்று பேருந்துகளும் விபத்துக்குள்ளான தில் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த  மேல்மருவத்தூர் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், பிரவீன், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தன லட்சுமி மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 5 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 130 விபத்துகளில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 414 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வாகனங்கள் அதிவேகங் களில் செல்வதே விபத்து மற்றும் உயி ரிழப்பு அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே, இணைப்புச் சாலைகள் வரும் இடங்களில் ஒளிரும் விளக்குகளை அமைத்து வாகனங்களின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை விரி வாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;