tamilnadu

சிறுவனை கடித்த எதிர்வீட்டு நாய்: உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை, மே 16- சென்னையில் ஆறு வயது சிறுவனை நாய் கடித்த நிலையில், நாய் உரிமையாளர் மூவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, புளியந்தோப்பு கேபி பார்க் 13ஆவது பிளாக் நான்காவது மாடி யில் வசிப்பவர் அருண்குமார். இவர் மாநக ராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.  இவர்களுக்கு எதிர் வீட்டில் ஸ்டெல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கின்ற னர்.

மேலும், ஸ்டெல்லா வீட்டில் நாட்டு  வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் புதனன்று சிறுவன் ஹரிஷ் (வயது6) தனது குடியிருப்புக்கு கீழே  சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டி ருந்தான். அப்போது, ஸ்டெல்லாவின் மகன் அரவிந்த்(10) நாயை நடைப்பயிற்சிக்காக வீட்டிற்கு கீழே அழைத்து வந்துள்ளார்.

அப்போது அங்கு ஏற்கெனவே நின்றிருந்த மற்றொரு தெரு நாய்க்கும் அரவிந்த் அழைத்து வந்த நாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டு இரண்டு நாய்களும் குரைத்துள்ளன. அந்த நேரத்தில் அங்கு  இருந்த நபர் ஒருவர் நாயை விரட்டி யுள்ளார். அப்போது அரவிந்த் தன் கையில் பிடித்திருந்த நாய் அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ் மீது பாய்ந்து கடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி சிறுவனை மீட்டனர். நாய் கடித்ததில்  சிறுவன் ஹரிசுக்கு முதுகு, கை, முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் சிறுவனை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் காவல் துறையினர் நாயை விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்ப டைத்தனர். மேலும் நாயை வளர்த்து வந்த  ஸ்டெல்லா, அவரது மகள் ப்ரீத்தா உட்பட  மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்தனர்.

;